உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க அணி திரள்வோம். ம.ஜெகதீஸ்வரன் MP அழைப்பு.
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க அணி திரள்வோம். ம.ஜெகதீஸ்வரன் MP அழைப்பு
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க மே தினத்தில் இன, மத, பேதங்களை கடந்து அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
வவுனியாவில் நாளை (01) இடம்பெறவுள்ள மே தினக் கூட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் கடந்த கால அரசாங்கங்கள் போன்று வெட்டி பேச்சுக்களை பேசாது, செயல் வடிவம் கொடுத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. தொழிலாளர்களின் உரிமைகளை அரசாங்கம் மதித்து அதற்கான செயற்பாடுகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி வவுனியா மாவட்டத்திலும் மே தினக் சுட்டத்தினை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் மாவட்டதில் உள்ள எமது ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு வுவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாக மே தின எழுச்சி ஊர்வலம் ஆரம்பமாகி குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தை அடைந்து அங்கு அமைச்சர் பிபல் ரத்நாயக்கா அவர்களின் பங்கேற்புடன் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வவுனியா வர்த்தக்க சங்கமும் தொழிலாளர்களின் நலன் கருதி தொழிலாளர்களுக்கு விடுமறை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை நாமும் வரவேற்கின்றோம்.
அவர்களின் தினத்தில் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைக்காக ஒன்று பட்டு குரல் கொடுத்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற இன, மத, கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் இதில் கலந்து கொண்டு தொழிலாளர் உரிமையை பெற வலுச் சேர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Post a Comment