கட்சி நிகழ்வின் செலவுகள் அரசாங்க செலவில் இல்லை. மீண்டும் உறுதிப்படுத்தியது தேசிய மக்கள் சக்தி அரசு.
மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நுவரெலியாவிற்குப் பயணித்த ஹெலிகாப்டர் பயணத்திற்கான முழுச் செலவையும் தேசிய மக்கள் சக்தி கட்சியே ஏற்றுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்தப் பயணம் ஒரு தனிப்பட்ட கட்சி சார்ந்த நடவடிக்கை என்பதால், அதற்கான கட்டணத்தை அரசாங்க நிதியிலிருந்து பயன்படுத்தாமல் கட்சியே அன்றைய தினமே முழு செலவுகளையும் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க வளங்களைத் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முன்மாதிரியான அரசியல் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment