தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரின் கோரிக்கைக்கு அமைய கிடைக்கப்பெற்ற அஞ்சல் வாகன சேவை.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற அஞ்சல் வாகன சேவை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த அஞ்சல் வாகன சேவை பிரச்சனைக்கு இன்று (8) தீர்வு கிடைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் உரிய தரப்பினருக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அஞ்சல் சேவையினை விரைவுபடுத்துவதற்காக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்களின் விரைவான நடவடிக்கையினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அஞ்சல் வாகனம் உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் அஞ்சல் வாகன சேவையானது அரசாங்கத்தால் வழங்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்க மாவட்ட அமைப்பாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு விடயங்களை மத்திய அரசின் கவணத்திற்கு கொண்டுசென்று தீர்வு பெற்றுத்தருகின்றமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.
குறித்த விடயங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும், அரச அலுவலகங்களில் காணப்படும் வள பற்றாக்குறை, காணி விடுவிப்பு என பல்வேறு விடையங்களில் தேசிய மக்கள் சக்தி அரசு கவனம் செலுத்துவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் அனைத்து பிரச்சனைகளும் மிக விரைவாக தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment