வண்ணன் முன்பள்ளியின் சமையலறைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் திலகநாதன் M.P பங்கேற்பு.

வண்ணன் முன்பள்ளியின் சமையலறைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் திலகநாதன் M.P பங்கேற்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வண்ணன் முன்பள்ளியின் சமையறைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (11) நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புதுக்குடியிருப்பு பிரதேச ஒருக்கிணைப்புக் குழு தலைவருமான வைத்தியர் செ.திலகநாதன் அவர்களின் 2026 ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக ரூபா 450,000.00 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரால் கிராம மக்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றதுடன், குறித்த கிராமத்தின் பிரதான வீதியின் நிலைமைகளை பார்வையிட்டார்.

காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சனைகள், வீதி பிரச்சனைகனை கேட்டறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு மேற்கு கிராம சேவையாளர், கிராம பிரையாசக்தி தலைவர், முன்பள்ளி ஆசிரியர்கள், சழூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.








Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.