மல்லாவி மத்திய கல்லூரிக்கு நேரில் சென்ற திலகநாதன் M.P
மல்லாவி மத்திய கல்லூரிக்கு நேரில் சென்ற திலகநாதன் M.P
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலையத்திற்குட்பட்ட தேசிய பாடசாலையான மல்லாவி மத்திய கல்லுரிக்கு இன்று (13) தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் செ.திலகநாதன் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.
குறித்த பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றை பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்ததுடன், புதிதாக கட்டப்பட்ட தொழினுட்பகூடம் மற்றும் பாடசாலை சிற்றுண்டிச்சாலை என்பவற்றை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த களவிஜயத்தில் தேசிய மக்கள் சக்தியின் முல்லைதீவு மாவட்ட செயற்பாட்டாளர்கள்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Comments
Post a Comment